Pages

இலவச கலர் டி.வி என்னும் கொடுமை

உலக நடப்புகளை தெரிந்துகொண்டு தங்கள் அறிவை வளர்த்தி கொள்ளவே அரசு இலவசமாக வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி கொடுக்கிறது என பவானிசாகர் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜீவா. ஓ.சுப்பிரமணியம் கூ‌றினா‌ர்.

மேற்க்கண்ட செய்தி சில மாதங்களுக்கு முன் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது. அடுத்து, ஐந்தாம் கட்டமாக மேலும் 40 லட்சம் இலவச கலர் டி.வி. 17 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு கூட்டம் என்று நேற்று எல்லா நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.
இந்த செய்தியினைப் படித்து விட்டு, வரி செலுத்துவோர் மட்டுமல்லாது நாட்டின் மீது அக்கறைக் கொண்ட அனைவருக்கும் ரத்தம் கொதித்திருக்கும்.




எனக்கு தெரிந்து தமிழகத்தில் தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கூட தாண்டாது. விட்டால் ஆறரை கோடி தமிழர்களுக்கும் (தமிழகத்தில் இருப்பது ஐந்தரை கோடிதான்) ஒன்று கொடுப்பார் போலிருக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை குடிசைப் பகுதிகளில் எங்கள் நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு ஆய்வுக்காக சென்ற போது, பெரும்பாலான் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியும், செயற்க்கைகோள் அலைவரிசைகளை கண்டுகளிக்கும் வசதிகளையும் கண்டு வியந்தேன். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத மக்கள் எவ்வாறு மின்சாரக் கட்டணம் செலுத்தினார்கள், எவ்வாறு கேபிள் வாடகை செலுத்துகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். அங்குள்ள ராஜ் திரையரங்கில் ரூ. 40 கொடுத்து ஒவ்வோரு புதிய படத்தையும் பார்க்கிறார்கள். டாஸ்மார்க்கில் தினம் சரக்கடிக்கிறார்கள். அவர்கள் வீடு இருப்பதோ, அடையாறு ஆற்றின் நடுவில்.

கோடை காலங்களில், அந்த சாலைகளில் (மறைமலை அடிகள் பாலத்தின் மீது) செல்வோர் நிச்சயம் கவனித்திருக்கக் கூடும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய குடிசை கிளம்பும். மழைக் காலங்களில் அடையாற்றில் வெள்ளம் வரும் போது, அவர்கள் அனைவரும் ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீரை மொண்டு ஊடக‌ங்களுக்கு போஸ் கொடுப்பார்கள். இது போன்ற ஒரு நிலையை எழும்பூர் புதுபேட்டை பிளாட்பார்ம் வாசிகளிடமும் கண்டிருக்கிறேன். ஆடித் திருவிழாவின் போது இவர்கள் இருக்கும் பகுதியில் பிரம்மாண்ட விநாயகர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருப்பார்.

ஆற்றின் குறுக்கே, சாலைகளை அடைத்து வீடு கட்டி இருக்கும் இவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுத்தது யார், யார் இவர்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துகிறார்கள், கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்தது யார் என்று யாருக்காவது தெரியுமா?
இலவச நிலம், அரசு கேபிள் டி.வி போன்ற எல்லாவற்றையும் விட குடும்பத்திற்க்கும், கழகத்திற்க்கும் இந்த திட்டத்தில் தான் அதிக வருமானம் போலிருக்கிறது. நலத்திட்டங்கள் அறிவிக்கப் படுவதே, கழக கண்மணிகள் ஒப்பந்தத்தின் மூலம் காசுபார்க்கத்தான் என்றான பிறகு, பல்வேறு நிறுவனங்களின் மூலமும் தன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்க்கிறார். பாலங்கள் கட்டுவதிலும், சாலைகள் சரி செய்யப் படுவதிலும், கழகத்தைச் சேர்ந்த குண்டர்கள் எவ்வளவு பணம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

தமிழக முதல்வரின் சொந்த ஊரான எங்கள் ஊரில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், ஒருவர் திமுகவிலும், மற்றொருவருவர் அதிமுகவிலும் இருந்து கொண்டு அரசின் ஒப்பந்தங்கள் வேறொருவருக்கு செல்லாமல் பார்த்து கொள்கிறார்கள். அதற்கு வழிகாட்டியவர் முதல்வர்.
இவர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் என்றால், இவருக்கு அண்ணா நூற்றாண்டு விழாவில் வந்த 100 சவரன் தங்கக் காசை விற்று வாங்கித் தரட்டும். அதற்க்காக மக்களின் வரிப் பணம் எத்தனை கோடிகளை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்.

சன் டி.டி.எச் இணைப்பை இன்னும் பல பேர் வாங்க வேண்டும் என்பதற்க்காகத்தான் இந்த 40 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் படுகின்றன என்று யாராவது சொல்லாமலிருந்தால் சரி.
அடுத்த தேர்தலில், ஒவ்வோரு வீடுகளுக்கும் ஒரு டி.டி.எச் வசதி செய்து தரும் ஒரு குடையும், செட்டாப் பாக்சும் இலவசம் என்று அறிவிப்பார். அந்த ஒப்பந்தத்தையும் கலாநிதி மாறனே பெற்று உலக கோடீஸ்வரர்கள் வரிசைக்கு முன்னேறுவார்.

தமிழக மக்கள், கலைஞர் டி.வி யில் "மானாட மயிலாட", சன் டிவியில் "டீலா நோ டீலா" போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்வதோடு, வறுமைக் கோட்டிலிருந்து, செல்வ செழிப்புள்ள குடும்பங்களாக மாறுவார்கள்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் துதிபாடிகள், கருணாநிதியை புகழ்ந்து புகழ்ந்து வீர தீர உறையாற்றுவார்கள். முதல்வர் திரைப்பட விழாக்களில் கண்டு ரசிக்கும் தொப்புள் தெரிய நடனமாடும் குத்தாட்ட நடனங்களை இவர் சார்ந்த தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும். அதைப் பார்த்து தமிழக மக்களின் பொது அறிவு வளர்ந்து, வரும் ஆண்டில் நடைப் பெறப் போகும் IAS, IPS போன்ற Civil Services தேர்வுகளில் பெருவாரியாக வெற்றி பெறுவார்கள்.

தமிழகத்தில் முக்கியமான பிரச்சனைகள் வரும் போது, “முதல்வருக்கு முதுகுதண்டில் வலி, ராமச்சந்திரா மருத்துவ மனையில் ஓய்வு” என்று கலைஞர் செய்திகள் பரபரப்பு செய்திகளை வெளியிடும். ஏற்கனவே டாஸ்மார்க்கில் சரக்கடித்து மட்டையாகி இருக்கும் பாமரன், இதைப் பார்த்து விட்டு வெளியே வந்து அரசு பேருந்தின் மீது கல்லெறிந்து சேதம் விளைவிப்பான்.

ஐயா பெரியவரே, நீங்கள் ஒய்வு பெறப் போகிறீர்களோ இல்லையோ, உங்கள் குடும்பம் பங்கிட்டது போக, மிச்சம் மீதி இருக்கும் தமிழக கஜானாவை காலி செய்து விடாதீர்கள்!



5 comments:

திருவாரூர் சரவணா said...

வணக்கம் பாஸ். திருவாரூர் ஆளுங்க யாரும் இல்லையேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். மாட்டியாச்சா. இலவச தொலைக்காட்ட்சியல வெறுத்துப் போய் இருக்குற ஆளுங்கள்ல நானும் ஒருத்தன். ஒரு காலத்துல பெரிய திரை தமிழ் நாட்டு மக்கள் முன்னால என்ன நடுக்குதுன்னு தெரிய விடாம மறைச்சுது. இப்ப சின்ன திரை வேற எதையும் பார்க்க விடாம கண்ணாடி மாதிரி ஒட்டிடுச்சு.

கனவுகள் விற்பவன் said...

""டாஸ்மார்க்கில் சரக்கடித்து மட்டையாகி இருக்கும் பாமரன், இதைப் பார்த்து விட்டு வெளியே வந்து அரசு பேருந்தின் மீது கல்லெறிந்து சேதம் விளைவிப்பான்.""

எங்க வீரத்தை வேற எங்க தான் காட்ட முடியும்??

கனவுகள் விற்பவன் said...

""மேற்க்கண்ட,குடும்பத்திற்க்கும், கழகத்திற்க்கும்""

எழுத்துப் பிழைகளை தவிர்த்தல் நலம்...

இளங்கோவன் said...

well said.....I think some changes might be required

நாடு எப்படி கெட்டா எனக்கு என்ன என்று நினைக்கும் மக்கள் இருக்கையில் அவர்கள் எது செய்தாலும் ஒன்றும் சொல்லுவதர்க்கில்லை

ஒரு திரைபடத்தில் சொன்னது போல......... "நமக்கு வாய்த்த அடிமைகள்.................... மிகவும் திறமைசாலிகள்" - முதல்வர்

வே.வெற்றிவேல் சந்திரசேகர் said...

வீடுதோறும் கழிப்பறை இல்லாத ஊரில் இலவச கலர் டிவி எதற்கு? இதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், குடிசைவாழ் மக்களை இவ்வளவு கீழ் தரமாக நீங்கள் சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது.

சென்னை என்பது அடிப்படையில் ஒரு நகரம் அல்ல. இது புரசை, சைதை, கீழ்பாக்கம் என கிராமங்களால் ஆனது. திட்டமிடாமல் வளர்ந்த நகரம் இது. நீங்களும் நானும் தான் சென்னை வாசிகளின் இட்த்தை ஆக்கிரமித்து இருக்கிறோம்.
கூவம் ஆற்றங்கரையில் வசித்தவர்கள் அவர்கள். இத்தனை நாட்களாக கூவ ஆற்றை நாசப் படுத்தியது யார், நாமா? அவர்களா?
வந்தேறிகளால் வந்த சாக்கடைகள் தானே கூவத்தில் ஓடுகிறது.
குடிசைவாசி டிவி பார்க்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று சொல்வதிலேயே உங்கள் அதிகார எண்ணம் புரிகிறது.

உங்கள் கோபம் எல்லாம் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கிறதே என்பதில் தான் இருக்கிறது. நியாயமாக புது தில்லியை உருவாக்கியதைப் போல் புது சென்னையை உருவாக்கி நீங்களும் நானும் வெளியேறியிருக்க வேண்டும்.