Pages

TED தமிழில்

 

வணக்கம் நண்பர்களே,

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் இந்தப் பதிவு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி!

TED.com குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். TED என்பது TECHNOLOGY ENTERTAINMENT AND DESIGN என்ற விரிவின் சுருக்கம். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த பதிவை படியுங்கள்.

சில தினங்களுக்குமுன், சந்திரயான் விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு TED காணொளியை இணைத்திருந்தார். அந்த காணொளி கண்டவுடன், அளவில்லாத ஆனந்தமடைந்தேன். 

அந்த கணொளியின் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தாலும், துணை உரைகள் (subtitle) மற்றும் விளக்கவுரைகள் அழகு தமிழில் தெளிவாக இருந்தன. எனக்கு ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும்,  தாய் மொழியில், எனக்கு ஏற்றவாறு விளக்கபட்டிருந்தது, மிகுந்த மகிழ்வை கொடுத்தது.

உதாரணத்திற்க்கு,

கிரகாம் ஹில்: நான் ஏன் வார நாள் சைவ உணவாளன் ஆனேன்?

 

தமிழ் TED காணொளிகளை மேலும் தேடியபோது, மிகுந்த வருத்ததிற்க்கு ஆளானேன். வெறும் 33 மூன்று காணொளிகளே, தமிழில் மொழி பெயர்க்க பட்டுள்ளன்.

6000 தமிழ் வலைபதிவர்கள், தமிழ் ட்வீட்டர்கள், 2 கோடி தமிழ் இணைய பயனார்கள் உள்ள ஒரு செம்மொழியான தமிழ் மொழியில் வெறும் 33 காணொளிகளே உள்ளது சோகத்தை ஏற்படுத்தியது.

6000 வலைப்பதிவுகள் இயங்கும் ஒரு மொழியில் 18 மொழிபெயர்ப்பாளர்களே உள்ளது மிகவும் வேதனை.

இன்னும் 700-க்கும் மேற்பட்ட காணொளிகள் தமிழ் மொழிபெயர்ப்புக்காக காத்திருக்கின்றன.

ஒவ்வொரு காணொளியும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. தமிழ் வலைப்பதிவர்கள் 100 பேர், ஒரு மாதம் ஒன்று சேர்ந்தால் போதும், ஏராளமான காணொளிகளை மொழிபெயர்த்துவிட முடியும். கணொளிகளை மொழிபெயர்க்க இலகுவான வழிமுறைகளையே கொடுத்துள்ளார்கள். நீங்கள் மொழி பெயர்க்கும் ஒவ்வொரு கணொளியையும், மற்றொருவர், சரிபார்த்து திருத்தம் செய்வார்.

உங்களுக்கு பிடித்தமான பேச்சாளர், தலைப்புகளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வேண்டியபடி மொழிபெயர்க்க முடியும்.

image 

உங்களுக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டும் தெரிந்திருந்தால், தயவு செய்து, ஒரு கணொளியையேனும் மொழி பெயர்க்க வேண்டிகிறேன். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு இதுபற்றிய செய்தியை சொல்லி, மொழிபெயர்க்க செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களை மொழிபெயர்ப்பாளர்களாக TED-ல் இணைத்துக் கொள்ள, இங்கெ சுட்டுங்கள்.

தமிழ் துணைஉரை சேர்ப்புக்காக காத்திருக்கும் TED காணொளிகள்

TED குறித்து பதிவர் கே.ர்.பி. செந்தில் எழுதிய வலைப் பதிவு

இந்த முயற்சியின் மூலம் ஒரு 10 கணொளிகள், தமிழில் துணை உரை கிடைக்கபெற்றால், செம்மொழி செழித்து வளரும்.