Pages

அனன்யாவும் கிரிஷும்

 

தலைப்பைப் பார்த்துவிட்டு  நாடோடிகள் நாயகி அனன்யாவுக்கும், ஹிரித்திக் ரோஷனுக்கும் ஏதோ கசமுசா சமாச்சாரம் என்று நீங்கள் வந்தால் இந்த பதிவு உங்களுக்கானது அல்ல.

சேத்தன் பகத் எழுதியுள்ள நான்காவது நாவலான "2 States”-‍ல் வரும் கதாநாயகிதான் அனன்யா. கதாநாயகன்தான் கிரிஷ்.

யாருங்க இந்த "சேத்தன் பகத்" என்று கேட்பவரா நீங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள கிருத்திகா எழுதியுள்ள  சேத்தன் பகத்-புத்தக அறிமுகங்கள்  என்ற பதிவைப் பார்க்கவும்.

சரி நாம் விடயத்திற்க்கு வருவோம்.

நம்ம மயிலாப்பூர் மாமி அனன்யா சுவாமிநாதனுக்கும், பஞ்சாப் சிங் கிரிஷ் மல்கோத்ராவுக்கும் இடையே நடக்கும் காதல் கதை தான் "2 States2_States"

இதைத் தான் நாங்கள் "அபியும் நானும்" படத்தில் பார்த்து விட்டோமே என்று சொல்லாதீர்கள். அது வேறு இது வேறு.

இந்தியாவின் இரு வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் கொண்ட இருவருக்கும் இடையே இருக்கும் காதலை அவர்கள் குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு விளக்கியிருக்கிறார். எனக்கு என்னவோ சொந்த கதையை நாவலாக்கியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் சேத்தன் பகத் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது மனைவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.

இனி கதை சுருக்கம் :

வட இந்தியாவைச் சேர்ந்த கிரிஷும், சென்னை மயிலாப்பூர் அனன்யாவும் அகமதாபாத் IIM-‍ல் சந்திக்கிறார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. கசமுசாவும் நடந்து விடுகிறது. இரு குடும்பத்தினரும் எதிர்க்கிறார்கள் (வழக்கம் போல). காதலர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் என்று முடிவு செய்கிறார்கள்.  (அட நம்ம ஜோடி, மின்சாரக் கண்ணா கதை). எப்படி குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறுகிறார்கள், இரு துருவம் போன்ற கலாச்சாரம் கொண்ட குடும்பங்களை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே கதை.

இந்தியாவில் திருமணம் என்பது இரு தம்பதிகளின் இணைப்பு அல்ல. இரு குடும்பங்களின் இணைப்பு என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். "இந்தியக் காதல் என்பது காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதல்ல" என்று வைர முத்துவின் கவிதையில் வரும்.அதை மிகுந்த நகைச்சுவையோடு விளக்கிச் சொல்லியிருக்கிறார். 

முதல் 50 பக்கங்களில் காதல் மட்டுமே வரும் கதையில், இரு குடும்பங்களும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சந்திக்கும் போது வேகம் பிடிக்கிறது. ஒரு திருமணத்திற்க்கு மாப்பிள்ளை வீட்டார் தான், பெண் கேட்க வேண்டும் போன்ற தமிழ் மரபுகளை நக்கலடித்தார் போல் இருக்கிறது. இயல்பான சேத்தன் பகத்தின் ஆங்கிலம், அவரது நகைச்சுவை மிகுந்த எழுத்து நடை ஆகியவை ரசிக்க வைக்கிறது. ‌ஆனால் இயல்பான நகைச்சுவை என்பதற்க்காக, கதா நாயகன் பேசும் ஆபாச வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நீங்க‌ள் நிறைய‌ த‌மிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ரானால், க‌தையில் வ‌ரும் திருப்ப‌ங்க‌ளை இல‌குவாக‌ ஊகிக்க‌லாம் ("எத்த‌னை த‌மிழ்ப் ப‌ட‌ம் பார்த்திருக்கென்" என்று க‌ம‌ல் மாதிரி கால‌ரை தூக்கி விட்டுக்கலாம்)

ஆக மொத்த‌த்தில் ஒரு முறை ப‌டிக்க‌க் கூடிய‌, இளைஞ‌ர்க‌ளுக்கேற்ற‌ ந‌கைச்சுவைப் புத்த‌கம். ப‌டிச்சுத் தான் பாருங்க‌ளேன் (எவ்வ‌ள‌வோ ப‌ண்றீங்க‌, இதையும் ப‌ண்ணுங்க‌ளேன்!)

பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைன்ன திட்டித் தீர்த்துடுங்க, ஆட்டோ மட்டும் அனுப்பிடாதீங்க!

5 comments:

Prasanna said...

பார்க்க முயல்கிறேன்...

Prasanna said...

""வட இந்தியாவைச் சேர்ந்த கிரிஷும், சென்னை மயிலாப்பூர் அனன்யாவும் அகமதாபாத் IIM-‍ல் சந்திக்கிறார்கள். இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. கசமுசாவும் நடந்து விடுகிறது.""

கசமுசா என்றால் என்ன என்று அடுத்த பதிவில் விளக்கவும். :-)))

உங்கள் தோழி கிருத்திகா said...

சூப்பரப்பூ....:)
என் பதிவு படிக்கரதே அதிகம்...லிங்க்வேர குடுத்துருக்கிங்க...தாங்க்யூ :)
நானும் அடுத்தபதிவுல இதை எழுதலாம்னு இருக்கேன்..கண்டிப்பாக பார்க்கவும்

மகா said...

nice review.........

கலையரசன் said...

நல்ல விமர்சனம் + படப்பகிர்வுக்கு நன்றி தலைவா!!
சொன்ன மாதிரி, எவ்வளவோ பண்ணிட்டோம்!! இதையும் பண்ணிதொலைப்போம்!!