Pages

படித்ததில் பிடித்தது - பிரார்த்தனை

நான் சில வருடங்கள், நாகையில் உள்ள தென்னிந்திய திருச்சபை பள்ளிக் கூடங்களில் படித்தபோது, காலை பிரார்த்தனையின் போது விவிலியத்தில் உள்ள சில பகுதிகளை படித்துக் காட்டுவார்கள். பெரும்பாலும் அவைகள் தனிமனித ஒழுக்கம், நன்னடத்தை நெறிமுறைகள் சம்மந்தப்பட்டதாக இருக்கும். அந்த பருவத்தில் எனக்கு அதில் ஒன்றும் விளங்கவில்லை. பின்னாளில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடும் போதும்தான் தனிமனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியமானது என்று புரிந்தது. (ச‌த்தியமா 'அந்நியன்' அம்பி இல்லீங்கோ)


சில சமயம், என் நண்பர்கள் கேட்பார்கள், யார் கூட தங்கியிருக்க? அல்லது, யார் உனக்கு மேலாளர்? யார் உனக்கு Team Mate? என்று. நான், அவர் பெயரைக் கூறியதும், அவனா, என்று ஆரம்பித்து, ஒரு கதை சொல்வார்கள்... அவர்களிடம் நான் சொல்லுவேன்  "சில பேரை நம்மால் மாற்ற இயலாது. பழகிக் கொள்ள வேண்டும், யாரையும் திருத்துவதற்க்காக நாம் வரவில்லை"

சில மாற்ற முடியாத நபர்களை / விடயங்களை அனுசரித்து செல்லும் பக்குவம் வேண்டும் என்பேன் நான்.

நாகேஷ் ஒரு படத்தில் சொல்லுவார், "எனக்கு தெரிஞ்சு நான் எந்த பாவமும் பண்ணினதில்லை, அதுவே உனக்கு பெரிய சொத்து என்று". எவ்வளவு சிறந்தது அது. நாம் யாருக்கும் நன்மை செய்ய தேவையில்லை, தீமை செய்யாமல் இருந்தால் போதாதா? பழி வாங்கும் உணர்ச்சி இல்லாமல் இருந்தால் போதாதா?

தோல்வி ஒன்றை சந்திக்கும் போது, அந்த பழியை யார் மேல் சுமத்தலாம், யாரை பழி தீர்க்கலாம் நம்மில் எவ்வளவு பேர் நினைக்கிறோம்.
அலுவலக‌ம், கல்லூரி, வீடு, உற்றார், உறவினர், பயணக்களின் போது உடன் வருவோர், இவர்கள் யாருமே நமக்கேற்றார் போல்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் அவர்களாக இருப்பார்கள், நீங்கள் நீங்களாகவே இருங்களேன்..... 

இந்த பக்குவங்களை எல்லாம், நான் அடைய காரணமாயிருந்தது, அன்னை தெரசா அவர்களின் பிரார்த்தனைகளில்  வரும் வைர வரிகள். 
பள்ளி வயதில் நான் புரியாமல் ஒப்புவித்த இந்த பிரார்த்தனைகள், கல்லூரிக் காலம் முடிந்த பின்னர், வாழ்க்கையை புரிந்த கொள்ள உதவியது. இறைவனிடம் வேண்டுவது போல் இருந்தாலும், ஒவ்வொரு தனிமனிதனும் கடை பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் இதில் இடம் பெறுவது சிறப்பு (பகுத்தறிவளர்களுக்கும் இது பொருந்த்தும்)‌.
என் மனங்கவர்ந்த அந்த பிரார்த்தனை

motherteresaஇறைவா!

மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்தவற்றை மாற்றக்கூடிய மன வலிமையையும், இரண்டிற்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளக்கூடிய அறிவையும் எனக்குக் கொடுக்க உன்னைப் பிரார்த்திக்கின்றேன்!
இறைவா!

என்னை நீ தெய்வீக அமைதிக்கான கருவியாக ஆக்கிவிடு. வெறுப்பு இருக்கின்ற இடத்தில் எல்லாம் நான் அன்பை விதைக்க வேண்டும்.

தீமை நிகழ்கின்ற இடத்தில் மன்னிப்பையும், சந்தேகம் இருக்கின்ற வட்டாரத்தில்  நம்பிக்கையையும், கலகம் ஏற்படும் இடத்தில் அமைதியையும், இருள் படர்ந்த நிலத்தில் ஒளியையும், துயரம் நிறைந்த பூமியில் மகிழ்ச்சியையும் நான் விதைப்பேனாக.

தெய்வீக சாம்ராஜ்ஜியத்தின் தலைவனே! நான் உன்னைக் கேட்டுக் கொள்வ‌தெல்லாம், நான் ஆறுத‌லோடிருக்கிறேன் என்ப‌த‌ன்று. அடித்த‌வ‌ருக்கு நான் ஆறுத‌ல் த‌ருகிறேனா என்ப‌தெ முக்கிய‌மான‌தாகும்.
நான் உல‌க‌த்தால் தெரிந்து கொள்ள‌ப் ப‌ட்டிருக்கிறேனா என்ப‌தைவிட‌, உல‌க‌த்தை நான் தெரிந்து கொண்டேனா என்ப‌தே என்னுடைய பிர‌ச்ச‌னையாகும்.

என்னை அடுத்த‌வ‌ர்க‌ள் நேசிக்கிறார்க‌ளா என்ப‌து ப‌ற்றிக் க‌வ‌லையில்லை, அடுத்த‌வ‌ர்க‌ளை நான் நேசித்த‌ப‌டி இருக்க‌ வேண்டும் என்ப‌தே என்னுடைய‌ கோரிக்கையாகும்.

ஆண்ட‌வ‌னே,

கொடுப்ப‌தால்தான் நாம் பெறுகிறோம் என்ப‌தும், ம‌ன்னிப்ப‌தால் தான் நாம் ம‌ன்னிக்க‌ப்ப‌டுகிறோம் என்ப‌தும், இற‌ப்ப‌தால்தான் நாம் புதிதாகப் பிற‌ந்து நிலையான‌ வாழ்வு பெறுகிறோம் என்ப‌து நான் அறிந்த‌ த‌த்துவங்களாக இருப்பதால், என்னுடைய கோரிக்கையை நீ ஏற்றுக் கொள்வாயாக!

பி.கு: பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க! பிடிக்கலைன்ன திட்டித் தீர்த்துடுங்க, ஆட்டோ மட்டும் அனுப்பிடாதீங்க!

2 comments:

malar said...

''''அவர்களிடம் நான் சொல்லுவேன் "சில பேரை நம்மால் மாற்ற இயலாது. பழகிக் கொள்ள வேண்டும், யாரையும் திருத்துவதற்க்காக நாம் வரவில்லை" ''''


கணவன் மனைவி உறவு மாதிரி


அன்னை தெரசா அவர்களின் பிரார்த்தனைகளில் வரும் வைர வரிகள்.
உண்மையிலேயே வைர வரிகள் தான் ..

நிகழ்காலத்தில்... said...

\\மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தையும், மாற்ற முடிந்தவற்றை மாற்றக்கூடிய மன வலிமையையும், இரண்டிற்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளக்கூடிய அறிவையும் எனக்குக் கொடுக்க உன்னைப் பிரார்த்திக்கின்றேன்\\


இந்த மனநிலை வாய்த்தால் போதும், வாழ்க்கையில் இனிமை பொங்கும்.

நல்லதொரு பகிர்வு

வாழ்த்துகள் நண்பரே