பஞ்சாப், லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை 58-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் தலைவர் மங்கத் சிங் மாங்கி சிறந்த தடுப்பாட்டக்காரர் விருதினைத் தட்டி சென்றார். அவருக்கு ஒரு டிராக்டர் (Tractor) பரிசாக வழங்கப்பட்டது.
கனடா நாட்டு அணி, இத்தாலி அணியை 66-22 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரான் உட்பட 10 நாட்டு அணிகள் இந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றன.
முதல் இடம் பிடித்த இந்திய அணிக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 51 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த கனடா அணிக்கு 25 லட்சமும், நான்காம் இடம் பிடித்த இத்தாலி அணிக்கு 10 லட்சமும் வழங்கப்பட்டது.
குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசின் உயர் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மற்றும் திரளான பொதுமக்கள்(!??!@#$) வந்திருந்தனர்.
இறுதி போட்டியை கண்டு களித்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு, அரசு பணி வழங்கப் படும் என அறிவித்தார்.
அடுத்த உலக கோப்பை போட்டிகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கங்களில் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை மேம்படுத்த எல்லா நடவடிக்கைகளையும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில் எட்டு நாடுகள் பங்கு பெறும் பஞ்சாப் தங்க கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!
"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!
7 comments:
நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!
"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!
....... ஜெய் ஹோ!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அருமையான பதிவு
ஆம் நம் வீரமிக்க தேசத்தின் விளையாட்டுக்களான
கபாடி,மல்யுத்தம் போன்றவைகளை
ஊகுவிக்க அம்பானியும்,மல்லய்யாவும்
வரும் காலம் உண்டோ
நன்றி மன்னார்குடி!
நன்றி சித்ரா!
நன்றி யோகி!
அனைவருக்கும் சித்திரைத் திருநாள்/தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அதனாலதான் நம்ப ஊர்ல 'சிங்குடா! அண்ணன் கிங்குடா!'னு பாடல் ஒலிக்குது...;)
நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.
Post a Comment