ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே - பாரதி
கபடி….கபடி….
எல்லாருக்கும் வணக்கமுங்க!
ரொம்ப நாளாகி விட்டது, பதிவுலகம் பக்கம் வந்து! நேரமில்லை என்றெல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை. எழுதுவதற்க்கு மனம் வரவில்லை. எது நடந்தாலும், அடுத்த சில மணி நேரங்களில், 100 பதிவுகளைக் காணமுடிகிறது. புதிய படம் வெளிவந்த சில மணி நேரங்களில், அதன் திரைப் பார்வைகள் Tamilish மற்றும் தமிழ் மணத்தின் முதல் பக்கங்களை நிரப்பி விடுகிறது. வலைப் பதிவர்களின் வேகம் வியக்க வைத்தாலும், ஊடகங்கள்தான் பரபரப்புக்காக, வியாபாரத்திற்க்காக செய்திகளை வெளியிடுகின்றன. வலைப் பதிவர்களும் அந்த பாதையில் செல்வது வருத்தமாக உள்ளது. அதில் ஒரு கடைக் கோடியில் இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது.
ஒட்டு மொத்த இந்தியாவே, IPL என்னும் பேஸ்பால் (BaseBall) விளையாட்டில் தங்கள் சுக துக்கங்களை மறந்துவிட்டு, கிறங்கி கிடக்கிறது. ஒரு வழியாக வெளி நாட்டினர், இந்தியா வந்து வேலை தேடும் சூழலை உருவாக்கி விட்டோம். வல்லரசாகி விட்டோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டு, பாரம்பரிய விளையாட்டுக்களை தொலைத்து விட்டோம். மாவோஸ்டுகளின் கொடூர தாக்குதல்களைக் கூட ஐபில் போட்டிகள் முழுங்கி விட்டதுவோ என்று எனக்கு சந்தேகம்!
கபடி (தூய தமிழில் ”சடுகுடு”) என்று ஒரு விளையாட்டு நினைவிருக்கிறதா? நல்ல வேளையாக விஜய் ஒரு படம் நடித்து, இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு நினைவூட்டினார். இன்றைய கிராமங்களில் கூட இது இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கு உலக கோப்பை நடந்துக் கொண்டிருக்கிறது, அதுவும் நமது இந்தியாவில். இன்றைய தினம் (12-ஏப்ரல்-2010) கபடிக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
IPL-போட்டிகளினால் மிகவும் வலிமைவாய்ந்த திரைஉலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில், கபடிப் போட்டிகள் எம்மாத்திரம். எந்த ஊடகமும் இது பற்றிய செய்தி்களை ஒளிபரப்பியதாக தெரியவில்லை. கூகிளாண்டவர் கூட மிக குறைவான தகவல்களையே தருகிறார். சரி விஷயத்திற்க்கு வருவோம்.
கபடி உலக கோப்பை, பஞ்சாப் மாநில அரசு உதவியுடன், பஞ்சாப்பின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா முதல் பிரிவில் (”A” Group) முதலிடத்தையும், பாகிஸ்தான் இரண்டாவது பிரிவில் (”B” Group) முதலிடத்தையும் பிடித்து திங்கள் மாலை லூதியானாவில் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.
முதல் பரிசை வெல்லும் அணிக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் பரிசாம்.
கபடி என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் கலாசாரக் காவலர்கள் என்றுக் கூறிக் கொள்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் தெரியுமா? நாம் நாள் தோறும் எள்ளி நகையாடும் சர்தார்ஜிக்கள், ஹாக்கியிலும், கபடியிலும் சிறந்து விளங்கி நமது பெருமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அணி வீரர்கள் பற்றிய எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, DD Sports Chennal-ல் ஒளிபரப்புகிறார்கள்.
முடிந்தால் இதையும் தான் பாருங்களேன்!!
கபடி மற்றும் உலகக் கோப்பை பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள, http://www.kabaddi.org/
கபடிக்கான ட்வீட்டர்(Twitter) பக்கம், http://twitter.com/kabaddiorg
வகைகள் :
கபடி,
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
என்ன தான் சொல்லுங்க. கபடி, கபடி தான்!
உங்கள் பதிவு, சிந்திக்க வைக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றி.
அருமையான பதிவு. கபடி உலகக்கோப்பையை செய்தி நிறுவனங்கள் அவ்வளாவாக கண்டுகொள்ளவே இல்லை.
ரொம்ப நாள் கழிச்சு பதிவு...நன்றி...
யாருமே எழுதாத நீ எழுதனும்னா எழுத ஒண்ணுமே இருக்காது. எல்லாரும் எழுதறத நீ எப்படி எழுதறன்றதுதான் முக்கியம். இது எனக்கு தோணுது...
நன்றி "சித்ரா"
நன்றி "மன்னார்குடி"
நன்றி "கனவுகள் விற்பவன்". நிச்சயமாக உங்கள் கருத்தை செயல்படுத்த விழைகிறேன்!
Post a Comment