Pages

தமிங்கிலிஷ் டூ தமிழ்

 

டிஸ்கி :  என் நண்பர்கள் பலருக்கு, தமிழிணையம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்களுக்கு அறிமுகப் படுத்தும் பொருட்டு, நான் அனுப்பிய மின்னஞ்சல் இது. அதை இங்கே பதிவிடுகிறேன். . 

“Hello thalaiva, vanakkam epdi irukeenga, nalla irukkeengala’ 

இந்த மாதிரி தமிங்கிலிஷ் (தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது/தட்டச்சு செய்வது - Phonetic) முறையில் தான்,  நம்மில் (தமிழ் தெரிந்த) பெரும்பாலானவர்கள், உரையாடல்களிலும் (Chats) மின்னஞ்சல்களிலும் பேசிக் கொள்கின்றனர்.  ஏன் இப்படி, தமிழிலேயே தட்டச்சு செய்தால் (Type Writing) என்ன?

யோசித்தது இல்லையா?   நமது தாய் மொழியைப் பற்றி தெரிந்த கொள்ள வேண்டாமா? 

பெரும்பாலானவர்கள் நினைப்பது, கணினியில் தமிழில் எழுத, தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்று. தேவையே இல்லை. மேற்க்கண்ட தமிங்கிலிஷ் முறையில் தட்டச்சு (Type) செய்தாலே, தானாக தமிழில் மாற்றிக் கொடுக்கும் மென் பொருட்கள் (Softwares) வலைப் பக்கங்கள் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

இணையத்தில் வலைப் பக்கமாகவும், உங்கள் கணினியில் தரவிறக்கியும் (Download) உபயோகப் படுத்தலாம்.

முதலில் இணையத்தின் ஜாம்பவானான கூகிளாண்டவர் கொடுத்திருக்கும், ”கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration) முறையை பற்றி பார்க்கலாம். தமிழ் மட்டுமல்லாது, எல்லா இந்திய மொழிக்கும் இந்த கூகிள் ட்ரான்ஸில்டேரஷன் என்கின்ற எழுத்து மாற்றி பயன்படும்.

இந்த முறையை பயன் படுத்த உங்களும் தமிழ் உச்சரிப்பும், தமிங்கிலிஷ் முறையும் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள்,  “superda”  என்று தட்டச்சு செய்தீர்களானால் அதுவே, “சூப்பர்டா” என்று மாற்றிக் கொள்ளும்.  உங்களுக்கு தேவையானதை அங்கே தமிழில் எழுதி, படியெடுத்து (Copy) உங்களுக்கு தேவையான இடத்தில் இட்டுக் கொள்ளுங்கள்.

அழுத்தம் உள்ள எழுத்துக்களை, ஆங்கில உயிரெழுத்துக்களான (Vowels)  a, e, i, o , u ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் பெறலாம்.  ”ஆ” என்பதற்க்கு  “aa”  என்று அடிக்க வேண்டும்.  ”தூ” என்ற எழுத்தைக் கொண்டுவர “thuu” என்றும் கூடுதலாக் ஒரு “u” சேர்க்க வேண்டும்.

இந்த கூகிள் எழுத்து மாற்றியை, உங்கள் இணைய/வலை பக்கங்களில் இணைத்துக் கொள்வதற்க்கான நிரலியையும் கூகிள் வழங்குகிறது. 

http://code.google.com/apis/ajaxlanguage/documentation/#Single

மென்பொருள் நிபுணர்கள், மேற்க்கண்ட தளத்தில் சென்று 19 இந்திய மொழிகளுக்கான API நிரலியை பெற்றுக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் நீங்கள் தடுமாறினாலும், விரைவில், விரைவாக உங்களால் எழுத இயலும். முயற்சித்துப் பாருங்கள். இந்த Google Transiltration-ல் உள்ள ஒரே சிறிய பிரச்சனை, ஒரு வார்த்தை முடித்து, நீங்கள் இடைவெளி (Space) விட்டால் மாத்திரமே தமிழாக மாற்றும். ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றாது.

ஒவ்வொரு எழுத்துக்கும் மாற்றும் இணைய வடிவிலான பக்கங்களும், தரவிறக்கம் (Download) செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையில் ஏராளமான மென் பொருட்களும் உள்ளன.

இணைய வடிவிலான பக்கங்களில் குறிப்பிடத் தகுந்தது, “தகுடூர்” மற்றும் “தமிழ் எழுதி” பக்கங்கள். “தகுடூர்”  நிரலியை உங்கள் கணினியில் தரவிறக்கி, HTML பக்கமாக, இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்தலாம். இந்த வலைப் பக்கங்கள், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் அனைவரும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட எழுத்து மாற்றிகள், ஒவ்வொரு எழுத்துக்களையும் மாற்றுவதால் புதிதாக பழகுபவர்களுக்கு இலகுவாக இருக்கும். a, e, i, o, u போன்ற எழுத்துக்களை ஒன்றிரண்டு கூடுதலாக சேர்ப்பதன் மூலம் சரியான வார்த்தைகளைப் பெறலாம்.

இந்த முறையை பயன்படுத்தும் போது கவனிக்கவேண்டியது, பெரிய/சிறிய எழுத்துகள் (Case Sensitive).  தமிழில் உள்ள,  ”ல, ள”, “ர, ற”, “ன, ண”  போன்ற எழுத்துக்களைப் பெற “Shift Key” யை பயன் படுத்த வேண்டும்.

மேற்க்கண்ட இணையப் பக்கங்கள் தவிர,  இ-கலப்பை, NHM Writer, அழகி போன்ற மென்பொருட்கள் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளும் வகையிலேயே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் தமிழில்,  Word Document, Excel Spreadsheet, NotePad, Chat Window என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் தமிழைப் பயன்படுத்தலாம்.

NHM Writer-யை கணினியில் நிறுவ, http://software.nhm.in/products/writer என்ற தளத்திற்கு சென்று, அங்கு உள்ள Download என்பதை கிளிக் செய்து NHWM Writer-யை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தரவிறக்கம் செய்ததை இரட்டை கிளிக் செய்து Install செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் டாஸ்க் பாரில் மணி வடிவ ஐகான் ஒன்று தோன்றும். இனி நீங்கள் Alt + 4 அழுத்துவதன் மூலம் தமிழிலும் அதே கீக்களை மீண்டும் அழுத்துவதன் மூலம் ஆங்கிலத்திலும் ரைப் செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு www.itvav.blogspot.com என்ற வலைப்பதிவில் பாருங்கள்.

தமிழில் எழுதுவதற்க்கான பக்கங்கள் அல்லது மென் பொருட்கள்

கூகிள் எழுத்து மாற்றி” (Google Transiltration) - http://www.google.co.in/transliterate/tamil

தகடூர்  - http://www.higopi.com/ucedit/Tamil.html

தமிழ் எழுதி - http://tamileditor.org/

”அழகி” மென்பொருள் - http://www.azhagi.com/docs.html

”இ-கலப்பை” மென்பொருள் - http://thamizha.com/

                         http://code.google.com/p/ekalappai/downloads/list

இணையத்தில் தமிழை பயன்படுத்துவோம்! தமிழ் வளர உறுதுணையாயிருப்போம்!

தகவல் உதவிகளுக்காக : கூகிள், தமிழ் மணம், ”தமிழ் இணையப் பயிரங்கம்” கூகிள் வலைக் குழுமம்,  போன்றவற்றிக்கு என் நன்றிகள்!!

6 comments:

Chitra said...

பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு நன்றி. சிலருக்கு வேலை தலத்தில் தமிழில் செய்திகள் அனுப்ப வழி இல்லாமல் இருக்கலாம்.

Unknown said...

நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்

cute photos said...

அருமையான பதிவு..

just visit my site
http://cutephotoss.blogspot.com

PRINCENRSAMA said...

நல்ல பணி... நண்பர்கள் பலருக்கும் பரிந்துரைக்கிறேன்

யாநிலாவின் தந்தை said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்....

Unknown said...

இனி தமிங்க்லிஷ் தேவையில்லை, நேரிடையாக தமிழில் தட்டச்சு பண்ண உங்களின் தொகுப்பு மிக பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

உங்களுடைய காதல்,கல்வி, திருமணம், வேலை மற்றும் எதிர் காலம் பற்றி சிறந்த முறையில் தெரிந்து கொள்ள ஒரு நல்ல இணையத்தின் முகவரியை உங்களுக்கு தருகிறேன். மேலும் அங்கு ஜாமகோள் ஜோதிட மென்பொருள் ஒன்றை பற்றியும் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது, அதன் மூலம் உங்களின் எதிர்காலம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம். www.yourastrology.co.in